ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்

Sat, 05 Oct 2024-12:16 pm,

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நாம் தினசரி நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்க முயற்சிக்கவும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். இது கலோரிகளை விரைவாக எரிக்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றமும் மேம்பட்டு உடல் எடை வேகமாக குறைகிறது.

காலையில் அனைவரும் தேநீர் அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் சேர்ப்பதற்கு பதிலாக கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரகம் டீ, ஓம தேநீர், சோம்பு டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என் அனைத்து வேளைகளிலும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இவற்றில் புரதச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தவிர்த்து தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை ஆரோக்கியமான வழிகளிலும், வேகமாகவும் குறைக்கலாம்.

முடிந்தவரை புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இதனுடன், உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை சீரான முறையில் சேர்க்க வேண்டும். சப்பாத்தி, சாதம் ஆகியவற்றை குறைத்துக்கொண்டு, பருப்பு வகைகள், காய்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் கலோரிகள் அதிகரிக்காமல் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கலாம்.

எடை இழப்பு முயற்சியில் இரவு உணவு மிக முக்கியமானது. ஏழு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது. அதன் பிறகு ஜீரணிக்க கடினமாக இருக்கும் எந்த உணவுகளையும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். நேரம் கடந்து உணவு உட்கொண்டால் அது செரிமானம் ஆகாமல் உடலில் கொழுப்பு அதிகமாக காரணம் ஆகின்றது.

உடல் எடையை குறைக்க உறக்கம் மிக அவசியம். உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க முயற்சிக்க வேண்டும். தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது உடலை மீட்க உதவும். உடல் எடையை குறைக்க சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

இந்த பழக்கங்களுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link