இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...

Fri, 05 Jul 2024-3:15 pm,

இந்திய ஆட்டோமொபைல் இந்த மாதம் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் 7 கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து பார்க்கலாம்.

 

Mini Cooper S மற்றும் Countryman E-Mini: இந்த இரண்டு மாடல்களும் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் உலகச் சந்தைகளில் கால் பதித்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த மாதம் வரவிருக்கின்றன. Mini Cooper S 7 கியர்கள் கொண்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோஸ் இஞ்சின் கொண்டதாகும். EV காரான Countryman E-Mini சுமார் 462 கி.மீ., வரை ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

 

BMW 5 Series LWB: இந்த கார் இந்தியாவில் ஜூலை 24ஆம் தேதி அன்று வெளியாகிறது. 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது.

 

Royal Enfield Guerilla 450: இந்த பைக் இம்மாத இறுதிக்குள் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 455cc எஞ்சின் கொண்ட இந்த பைக்கின் ஆன்-ரோடு விலை 3.30 லட்சம் ரூபாய் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Mercedes Benz EQA: EV காரான இது வரும் ஜூலை 8ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இது 560 கி.மீ., ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் ஆன்-ரோடு விலை 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

BMW CE 04: ஜூலை 24ஆம் தேதி இந்தியாவில் இந்த பைக் அறிமுகமாக உள்ளது. இந்த பைக் 130 கி.மீ., வரை ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 0-100 kmph வேகத்தை வெறும் 9.1 விநாடிகளில் இந்த பைக் எட்டிவிடும். இன் ஆன்-ரோடு விலை சுமார் 12 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

Nissan X-Trail: 7 சீட்டர் காரான இந்த மாடல் இந்தியாவில் இம்மாதம் வெளியாக உள்ளது. 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனையாகும் என கூறப்படுகிறது. 

 

Bajaj CNG Bike: இந்த பைக்கின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பைக் இன்று அறிமுகமாக உள்ள நிலையில் அதன் பெயரும், முக்கிய அம்சங்களும் இன்று வெளியாகும் எனலாம். இதுதான் உலகின் முதல் CNG பைக்காகும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link