டி20 உலகக் கோப்பை: அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 6 அணிகள்!

Fri, 14 Jun 2024-10:25 pm,

9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறைந்த அளவிலான ரன்களை துரத்தவே மிகவும் கடினமாக போராடி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. 

 

அந்த வகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றிகரமாக இலக்கை துரத்தி போட்டியை வென்ற டாப் 6 அணிகளை இங்கு காணலாம். 

 

2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை இலங்கை 77 பந்துகள் மீதம் வைத்து வீழ்த்தியது, இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடிக்கிறது. 

 

2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை இந்திய அணி 81 பந்துகள் மீதம் வைத்து வீழ்த்தியது, இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறது.

2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை ஆஸ்திரேலியா 82 பந்துகள் மீதம் வைத்து வீழ்த்தியது, இதில் 4ஆவது இடத்தை பிடிக்கிறது. 

 

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் நமீபியா அணியை ஆஸ்திரேலியா 86 பந்துகள் மீதம் வைத்து வீழ்த்தியது, இதில் 3ஆவது இடத்தை பிடிக்கிறது. 

 

2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை இலங்கை அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. 

 

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 101 பந்துகள் மீதம் வைத்து வென்றது, இதில் முதல் இடத்தை பிடிக்கிறது. இங்கிலாந்து அணி 47 ரன்கள் இலக்கை 3.1 ஓவர்களில் அடித்ததன் மூலம் அதன் நெட் ரன்ரேட்டும் அதிகமாகி உள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பும் அதிகமாகி உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link