Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்
கோடிகளில் கார்பஸ்: டாப்-அப் SIP மூலம் உங்களின் மிகப்பெரிய நிதி இலக்குகளை அடையலாம். முதலீடு மற்றும் சேமிப்பில் இந்த உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம், கோடிகளில் பணத்தை எளிதாக சேர்க்கலாம். டாப்-அப் எஸ்ஐபி என்பது ஒரு சிறிய தொகையில் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் உயரும் போது எஸ்ஐபி தொகையை படிபடியாக அதிகரிப்பதாகும்.
SIP டாப் அப் கணக்கீடு: மாதாந்திர SIP ரூ.15000 எனத் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில், முதலீட்டுத் தொகையை 10% என டாப் அப் செய்து வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் கிடைக்கும் ஆண்டு வருமானம் கூட்டு வட்டியின் பலனுடன் குறைந்தபட்சம் 12% என்ற அளவில் இருக்கும் அதன் மூலம் பணம் எந்த அளவிற்கு பன்மடங்காகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
7 முதல் 14 ஆண்டுகள் தொடர் முதலீடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ 25,64,291 என்ற அளவில் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு: ரூ. 50,61,489 என்ற அளவில் இருக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.75,36,512 என்ற அளவில் இருக்கும். 14 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ. 1,05,15,410 என்ற அளவில் இருக்கும்.
15 முதல் 18 ஆண்டுகள் தொடர் முதலீடு: 15 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ. 1,25,10,223 என்ற அளவில் இருக்கும். 16 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.1,50,17,707 என்ற அளவில் இருக்கும். 17 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு ரூ. 1,74,82,715 என்ற அளவில் இருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.2,05,56,212 என்ற அளவில் இருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
19 முதல் 22 ஆண்டுகள் தொடர் முதலீடு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ. 2,40,96,085 என்ற அளவில் இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.2,81,68,057 என்ற அளவில் இருக்கும். 21 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.3,18,46,711 என்ற அளவில் இருக்கும். 22 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐபி டாப் அப் மதிப்பு, ரூ.3,82,16,651 என்ற அளவில் இருக்கும்.
SIP முதலீட்டை தொடங்கும் முறை: முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) உங்கள் பணத்தை ஒரே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்யுங்கள். அதே நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகையை ஒரு நிலையான சதவீதத்தால் அதிகரிப்பது டாப்-அப் எஸ்ஐபி ஆகும்.
நீங்கள் ரூ.10,000 மாதாந்திர SIP மூலம் முதலீடு செய்யத் தொடங்கி, 1 வருடத்திற்கு பிறகு, 13வது மாதத்தில், முதலீட்டு தொகையை 10 சதவீதம் அதிகரித்து, 10,000 ரூபாய்க்கு பதிலாக, 11,000 ரூபாய் மாதந்தோறும் டெபாசிட் செய்யப்படும். 25வது மாதம் அதாவது 2 வருடங்கள் நிறைவடைந்தவுடன், முதலீடு மீண்டும் 11000 ரூபாயில் 10% அதிகரிக்கப்படும். டாப் அப் எஸ்ஐபியில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு முதலீட்டுத் தொகை அதிகரிக்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.