மழையை என்ஜாய் பண்ணனுமா... 7 இடங்களுக்கு கண்டிப்பாக சுற்றுலா போங்க!

Thu, 04 Jul 2024-11:22 am,

தென்னிந்தியாவில் சமீப நாள்களாக பல பகுதிகள் மழை கொட்டி வருகிறது. இந்த மழை காலத்தில் தென்னிந்தியாவில் சுற்றுலா செல்ல தகுதிவாய்ந்த 7 இடங்களை இதில் காணலாம். 

 

ஹம்பி (கர்நாடகா): UNESCO உலக பாரம்பரிய தளம் இதனை அங்கீகரித்துள்ளது. பழமைவாய்ந்த கட்டடங்கள் விஜயநகர பேரரசின் எச்சங்களாக இன்றைய காலத்தில் எஞ்சி நிற்கின்றன. இந்த பருவமழை காலத்தில் துங்கபத்ரா ஆறும் செழிப்பா ஓடும் என்பதால் இந்த இடத்தை தவறவிடாதீர்கள்.

 

உடுப்பி, கோகர்னா (கர்நாடகா): இந்த இரண்டு நகரங்களும் கர்நாடகாவின் அழகான மற்றும் செழிப்பான கடலோர நகரங்கள் ஆகும். ரம்மியான கடற்கரைகள், பழமைவாய்ந்த கோயில்கள், பச்சை போர்த்திய நிலங்கள் என இந்த பருவமழை காலத்தில் இந்த இடங்களையும் தவறவிட்டுவிடாதீர்கள்

 

 

வயநாடு (கேரளா): பனி படர்ந்த மலைகள், தேயிலை தோட்டங்கள் என பல்லுயிர் சூழல் நிறைந்த இடமாகும். கேரளாவில் இந்த பகுதி சுற்றுலாவுக்கு பெயர் போனது. குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடனும் இங்கு சுற்றுலா செல்லலாம். 

கூர்க் (கர்நாடகா): இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றழைக்கப்படும் இந்த கூர்க் நகருக்கு நிச்சயம் இந்த பருவமழை காலத்தில் நீங்கள் செல்ல வேண்டும். காப்பி தோட்டங்கள், பனிகள் அடர்ந்த மலைகள் என எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகளை மிஸ் பண்ணாதிங்க

 

மூணார் (கேரளா): கேரளாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சி, எப்போதும் குளிர் என மூணாரை இந்த பருவமழை காலத்தில் ரசிக்காமல் இருக்கவே முடியாது.

 

மகாபலிபுரம் (தமிழ்நாடு): சென்னையில் இருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலா தளமான இதை இந்த மழை காலத்தில் பார்ப்பது தனி ரசனையாக இருக்கும். பல்லவர் கால சிற்பங்கள், கோயில்கள், கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.

 

கொடைக்கானல் (தமிழ்நாடு): பெரிய ஏரிகள், நீர் வீழ்ச்சிகள், உயரமான மரங்கள் கொண்ட அர்ந்த காடுகள் ஆகியவற்றை காண நீங்கள் நிச்சயம் இந்த சீசனில் கொடைக்கானல் போகலாம். மஞ்சும்மல் பாய்ஸ் பார்த்து ரசித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் உடனே இங்கு ஒரு பிளான் போடுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link