எந்த எண்ணெயை இரவில் தொப்புளில் போட்டால் நல்லது? ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆயில் மசாஜ்!
வயிற்று வலி முதல் பல்வேறு வலிகளையும் போக்க எண்ணெய் மசாஜ் பயன்படுகிறது. அதில் எந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்லது என்று தெரிந்துக் கொள்ளலாம். அதை எப்படி எங்கே பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
தொப்புளில் எண்ணெய் போடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது
இரவில் எண்ணெயை தொப்புளில் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தூக்கமின்மை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை தொப்புளில் போட்டு மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும். தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதோடு செரிமான அமைப்பை பலப்படுத்தும், தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவுவதால் சோர்வு குறைவதுடன் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். தேங்காய் எண்ணெயை தொப்புளில் தடவினால் சரும வறட்சி தீரும்
பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவது சருமத்தை மென்மையாக்குகிறது, பளபளப்பைக் கொடுக்கும் என்பதுடன் வறட்சி பிரச்சனையை குறைக்கிறது. பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவினால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மன அழுத்தத்தை குறைக்கவும் செரிமான அமைப்பையும் மேம்படுத்த பாதாம் எண்ணெய் உதவும்
விளக்கெண்ணெயை தொப்புளில் தடவுவதால் சருமம் ஈரப்பதமாகி, மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். விளக்கெண்ணெய் அடர்த்தி அதிகமானது. உடலை குளிர்ச்சிப்படுத்தும் விளக்கெண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் மேம்படும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கும்.
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.