அழகில் வரைந்த ஓவியமா திரிஷா? பொன்னியின் செல்வன் 2-க்குப் பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் கலக்கியிருக்கிறார் திரிஷா
நடிப்பு ராட்சசி என படம் பார்த்தபிறகு ரசிகர்கள் திரிஷாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்
திரையில் திரிஷா இத்தனை அழகுடன் பார்த்தது, படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளனர்
குந்தவைக்கு திரிஷாதான் பொருத்தமான கேரக்டர் என நிரூபித்துவிட்டாராம்
அழகும் நடிப்பும் திரிஷாவுக்கு இந்த படம் மைல்கல்லாக இருக்கும் என மெய்சிலிர்க்கின்றனர் அவரது ரசிகர்கள்
குந்தவையாகவே திரிஷா வாழ்ந்துவிட்டதாகவும் அவரை வாழ்த்தியிருக்கின்றனர்
ரசிகர்களின் பாஸிட்டிவான ரியாக்ஷனால் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகை திரிஷா