22 வருட த்ரிஷா சினிமா பயணத்தில்..கண்டிப்பாக பார்க்கவேண்டிய 8 படங்கள்!

Fri, 13 Dec 2024-5:28 pm,

த்ரிஷா சினித்துறையில் பயணம் செய்து இன்றுடன் 22ஆண்டுகள் நிறைவடைந்ததை  தன் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் பதிவிட்டு “22 வருடங்களாக திரைத்துறை என்ற இந்த மாயாஜாலத்தில் அங்கம் வகித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். 

 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2005யில் வெளியான “ஆறு” படத்தில் த்ரிஷாவும் சூர்யாவும் ஜோடியாக நடித்த படம். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளன.

 

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் 2018 ஆண்டு அக்டோபர் 4யில் வெளியான “96” படம். இதில் த்ரிஷா வேற லெவல் மாசாக நடித்திருக்கிறார். 

கௌதம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டில் வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த த்ரிஷா சூப்பராக நடித்து திரையரங்கைக் காதல் மழையில் நனையவைத்தது இன்றும் மறக்கமுடியாத நினைவுகள்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 அன்று தரணி இயக்கத்தில் வெளியான “கில்லி” படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா கியூடாக நடித்து ரசிகர்களின் நெஞ்சை பறித்திவிட்டார். 

2008 ஆம் ஆண்டு “அபியும் நானும்” படம் த்ரிஷாவின் திரைத்துறை பயணத்தில் இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இதில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்து இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளன. 

2016 ஆம் ஆண்டு அக்டோபர் 27 தேதியில் திரையரங்கில் வெளியான “கொடி” படத்தில் தனுசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றப் படமாக த்ரிஷாவுக்கு அமைந்தது.  

த்ரிஷா மற்றும் விக்ரம் இருவரும் ஜோடியாக நடித்த “ சாமி” படம் 2003 ஆண்டு மே மாதம் 1 அன்று உலகெங்கிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த படம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link