10 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்

Wed, 20 Jul 2022-2:43 pm,

குறைந்த ஹீமோகுளோபின்: குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை இந்தியாவில், குறிப்பாக பெண்களிடையே மிகவும் பொதுவானது, எனவே ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க, இந்த விஷயங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும், அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

தினை: தினையை தொடர்ந்து உட்கொள்வது ஹீமோகுளோபின் மற்றும் சீரம் ஃபெரிடின் அளவை மேம்படுத்துகிறது, இதனால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை குறைகிறது, இது உலகளவில் அதிகரித்து வருகிறது.

கீரைகள்: நாம் எப்போதும் இரும்பின் நல்ல ஆதாரங்களைத் தேடுகிறோம், கீரைகள் அதற்கு நல்ல ஆதாரமாகும். இரும்புச் சத்து நிறைந்த கீரைகள் ஹீமோகுளோபின் அளவையும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து எரித்ரோசைட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். 

எள் விதைகள்: எள் விதைகளில் இரும்பு, ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள், தாமிரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் போன்ற பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link