மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் - இயக்குநர் செல்அம் அறிவிப்பு!

Tue, 01 Oct 2024-1:04 pm,

மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து TTF வாசன் முழுவதுமாக நீக்கப்படுகிறார் என்றும், அவருக்கு பதில் வேறு ஒருவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார்.

 

புதிய கதாநாயகன் பற்றிய விவரமும், படத்தின் புதிய பர்ஸ்ட் லுக்கும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும். சில கால சூழ்நிலை காரணமாக TTF வாசன் இந்த படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

TTF வாசன் அவருடைய சொந்த வேலைகளில் பிஸியாக உள்ளதால் படத்தில் நடிக்க முடியவில்லை. அவர் சிறை சென்றதால் படப்பிடிப்பு தாமதமாகிறதா என்ற கேள்விக்கு, வாசன் என்னுடனும் கதையுடனும் பயணம் செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. அதனால் வேறு கதாநாயகனை மாற்றுகிறோம்.

 

படத்தின் ஹீரோ சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ வந்தவுடன் அந்த காட்சிகளும் எடுத்து விரைவில் முழு படப்பிடிப்பும் முடிக்கப்படும். இதுவரை 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

 

புதிய ஹீரோவிற்காக இரண்டு மூன்று பேரை தேர்வு செய்துள்ளோம். அதில் ஒருவரை இறுதி செய்துவிட்டு விரைவில் அறிவிப்போம். டிடிஎப் வாசன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ஆனால் என்னுடைய இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.  

 

ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கூட பிரிகிறார்கள், நானும் டிடிஎஸ் பாசனும் பிரிவதில் எந்தவித குழப்பமும் வேண்டாம்.  எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை, படம் தொடர்பாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார் - செல்அம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link