“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” திருக்குறளின் அர்த்தம் என்ன தெரியுமா?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்ற வரிகள் கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், விஜய்யும் அவர் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும்தான்.
தவெக கட்சியின் கொள்கை பாடலின் தொடக்க வரியே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிதான்.
அம்பேத்கர், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மால், அண்ணா ஆகியோரை அரசியல் வழிக்காட்டிகளாக வைத்து கட்சி இயங்க இருப்பதாக விஜய் குறிப்பிட்டார்.
விக்கரவாண்டியில் நடந்த முதல் தவெக மாநாட்டில், விஜய் பிற கட்சிகள் மீது வைத்த விமர்சனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிய ஆரம்பித்திருக்கின்றன.
மதச்சார்பற்ற சமூக நீதி பேசும் கட்சியாக, தவெக இருக்கும் என விஜய் தெரிவித்திருக்கிறார். சொன்னதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
45 நிமிடங்கள் பேசிய விஜய், தனது உரையில் தவெக கொள்கைகளை விவரமாக விவரித்தார். இதில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இதன் முழுக்குறள்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை
குறள்-972
எல்லா உயிர்க்கும் பிறப்பு சமமே. இருப்பினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளினால் சிறப்பியல்பு சமமாக இருப்பதில்லை. என்பதே இதன் அர்த்தமாகும்.