இனி ட்விட்டரிலும் நீங்க வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் - எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்?

Fri, 19 Feb 2021-2:05 pm,

இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சம் மற்ற தளங்களின் DM அம்சங்களைப் போன்றது தான். வாய்ஸ் ட்வீட்களைப் போலவே, பயனர்கள் அதிகபட்சமாக 140 வினாடிகள் வரையில் நீளமான வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். புதிய அம்சத்தைப் பெற, முதலில், உங்கள் Google Play Store அல்லது Apple App Store இலிருந்து Twitter பயன்பாட்டை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

படி 1: புதிய உரையாடலைத் தொடங்க DM பிரிவுக்குச் செல்லுங்கள்.

படி 2: பின்னர் அரட்டையைத் திறந்து வலது பக்கத்தில் குரல் பதிவு (Voice Recording) ஐகானைக் காணலாம்.

படி 3: பின்னர் உங்கள் செய்தியைப் பதிவு செய்ய குரல் பதிவு ஐகானைக் கிளிக் செய்யவும், பின்னர் உங்கள் பதிவை முடித்ததும் ‘சிவப்பு ஐகானை’ கிளிக் செய்யவும்.

அதை அனுப்புவதற்கு முன்பு நீங்கள் அதைக் கேட்கலாம், நீங்கள் ரத்து செய்ய விரும்பினாலும் Cancel பட்டனைக் கிளிக் செய்து ரத்து செய்துக்கொள்ளலாம். தவிர, ஐபோன் பயனர்கள் தங்கள் செய்தியைப் பதிவுசெய்ய ஒரு பிரெஸ் & ஹோல்டு வசதியைப் பெறுவார்கள், பின்னர் அவர்கள் செய்தியை அனுப்ப பொத்தானை ஸ்வைப் செய்து ரிலீஸ் செய்ய வேண்டும்.

கூடுதலாக, ட்விட்டர் ஒரு கிளப்ஹவுஸ் போன்ற குரல் அடிப்படையிலான அரட்டை அறையான, ஸ்பேசஸ் (Spaces) என்பதிலும் வேலை செய்து வருகிறது.  பயனர்கள் தங்களைப் பின்தொடர்பவர்கள் உரையாடலில் சேரக்கூடிய ஒரு ‘இடத்தை’ (Space) உருவாக்க இது அனுமதிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link