இது 7 star ஹோட்டல் அல்ல, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் Ultra-modern வீடு!
![டென்னிஸ் வீரர் பெடரரின் ஆடம்பரமான பங்களா Bunglow](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/02/22/184362-amenities.jpg?im=FitAndFill=(500,286))
எட்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர் பெடரரின் ஆடம்பரமான பங்களாவா? இல்லை நவீன அரண்மனையா? எதுவாக இருந்தாலும் இப்படியொரு வீடு நமக்கு இருந்தால்? இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியுமா?
![கட்டிடம் எங்கே அமைந்துள்ளது? Where is the building located?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/02/22/184365-wolleruv.jpg?im=FitAndFill=(500,286))
ஸ்விஸ் கன்டோனில் (Schwyz canton) உள்ள Wollerau என்ற இடத்தில் இந்த அதிநவீன வீடு அமைந்துள்ளது. வரி விலக்குக்கு பெயர் பெற்ற இடம் இது.
![கட்டடத்தின் விவரங்கள் Details of the buidling](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/02/22/184361-luxury.jpg?im=FitAndFill=(500,286))
வீட்டின் தரையிலிருந்து மேல் மாடி வரை முழுமையாக கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே சூரிச் ஏரியைக் பார்க்க வசதியாக பெரிய பால்கனிகளைக் கொண்டுள்ளது. ஆசுவாசமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும் இடத்தில் கண்ணாடியால் ஆன குவிமாடம் உள்ளது.
F1 ஃபார்முலா கார் பந்தய வீரர் கிமி ரெய்கோனென் மற்றும் பெலிப்பெ மாஸா ஆகியோரும் வொல்லெராவில் வீடு வந்துள்ளனர்.
இந்த வீட்டில் நீச்சல் குளம், ஸ்பா, முதல் தர உடற்பயிற்சி கூடம் உள்ளது. ஒரு நிலத்தடி கார் பார்க்கிங்கும் உண்டு. ரோஜர் பெடரர் தனது மனைவி மிர்கா மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசிப்பார்.
பெடரரின் பெற்றோரும் இதே வீட்டில் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள்.