சூரியன் சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன்-சுக்கிரன் இணைவதால் தொழில் மற்றும் நிதிநிலையில் சிரமங்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் வேலை செய்யும் பாணி பாராட்டப்படும். எனினும், விரும்பிய முன்னேற்றம் இல்லாததால் மனதில் வருத்தம் இருக்கும். இளைய சகோதர சகோதரிகள் உங்களிடம் நிதி உதவி கேட்கக்கூடும். அவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், குடும்பம் உறுப்பினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு கோபம் ஏற்படலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் - சுக்கிரன் இணைவதால் செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. இல்லையென்றால், செலவுகள் எல்லை தாண்டி போகலாம். தொண்டை சம்பந்தமான பிரச்சனை வரலாம். வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கன்னி ராசிக்காரர்கள் இந்த 15 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த காலத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது முதலீடு செய்தால் அதனால் நஷ்டம் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யும். உறவுகள் மோசமடையக்கூடும். விஷயங்களை மிகவும் கவனமாகக் கையாளுங்கள். காதல் வாழ்க்கையிலும் குழப்பங்கள் ஏற்படலாம்.
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல துறைகளில் சவால்களை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்காது. தையியத்தை விட்டு விட்டுவிடாதீர்கள், பொறுமையாக இருங்கள். சில கெட்ட செய்திகள் கவலை தரலாம். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
சூரியன்-சுக்கிரன் இணைவதால் மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் சிரமங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் தொழில் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். வேலையில் சிரமங்கள் இருக்கலாம். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரச்சனைகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)