Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்

Sat, 25 May 2024-1:24 pm,

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கிறது. 

டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பல முக்கிய இந்திய நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இப்படம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வீர தீர சூரன்:

விகர்ம் நடித்து வரும் படம், வீர தீர சூரன். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக இருந்த இந்த படத்தில் தற்போது விக்ரம் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 

தங்கலான்:

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம், தங்கலான். இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் மாளவிகா மோகனன், பசுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. 

தக் லைஃப்:

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம், தக் லைஃப். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. 

சூர்யா 44:

கார்த்திக் சுப்புராஜ் உடன் சூர்யா முதன் முதலாக கைக்கோர்த்திருக்கும் படம், இது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. 

ராயன்:

தனுஷ், இயக்கி-நடித்திருக்கும் படம், ராயன். இதில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் இசைவெளியீட்டு விழா, ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. 

குபேரா:

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம், குபேரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

மெய்யழகன்:

நடிகர் கார்த்தியின் 27வது படம், மெய்யழகன். இந்த படத்தில் அவர் அரவிந்த் சுவாமியுடன் சேர்ந்து நடிக்கிறார். இதன் அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை 96 படத்தின் இயக்குநர், பிரேம் குமார் இயக்குகிறார்.

கங்குவா:

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம், கங்குவா. சூர்யா ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. 

இந்தியன் 2:

இந்தியன் படத்தின் ரிலீஸிற்கு 26 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் படம், இந்தியன் 2. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் ஜூன் மாதம் இசைவெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. 

குட் பேட் அக்லி:

அஜித் குமார் நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. 

தி கிரேட்டஸ்ட் அஃப் ஆல் டைம்:

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், GOAT (The Greatest of All Time). விஜய், இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்படம், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. 

கூலி:

லோகேஷ் கனகராஜ்ஜுடன், ரஜினிகாந்த் கைக்கோர்த்திருக்கும் படம் கூலி. இந்த படத்தின் டைட்டில் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. 

அமரன்:

புல்வாமா தாக்குதலை வைத்தும், அதில் முக்கிய பங்காற்றிய இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை வைத்தும் உருவாகி வரும் படம், அமரன். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சாய் பல்லவி, அவருக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இப்படம், இந்த ஆண்டின் செப்டமர் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link