கூலி to குட் பேட் அக்லி..2025 பெரிய படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!!
)
இந்த ஆண்டை போல இல்லாமல், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பல பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பதையும், அவை எந்த மாதத்தில் ரிலீஸாக இருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.
)
விடாமுயற்சி:
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம், இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், இந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால், அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகலாம்.
)
வீர தீர சூரன்:
எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் படம், வீர தீர சூரன். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாகவும், அடுத்த வருடம் ரிலீஸாகலாம் எனவும் கூறப்படுகிறது.
தக் லைஃப்:
மணிரத்னம் இயக்கத்தி கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இந்த படம், அடுத்த ஆண்டு வெளியாகுமாம்.
தளபதி 69:
விஜய்யின் கடைசி படமான தளபதி 69, அடுத்த வருட அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி டியோல், நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சூர்யா 44:
சூர்யாவின் 44வது படத்தை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த படம், அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி:
அஜித்குமார் நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கூலி:
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹீர், உப்பேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம், அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.