இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கும் பைக்குகளின் பட்டியல்
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீடியர் 650 பைக், ஆகஸ்ட் 2022 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். (PC-bikewalle)
ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் ஏப்ரல் 2022 இல் உலக சந்தையில் நுழைந்தது. நிறுவனம் விரைவில் இந்த பைக்கை இந்திய சந்தைக்கும் கொண்டு வரவுள்ளது.
BMW Motorrad விரைவில் Apache RR 310 அடிப்படையிலான புதிய பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இது BMW 310 RR என்ற பெயரில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்த பைக்கின் விலை ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் தனது சமூக தளத்தில் இந்த பைக்கை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. எகிலிப்ஸ் என்ற பெயருக்கு ஏற்ப, இந்த பைக் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த புதிய பல்சர் பைக், பல்சர் என்250 போன்ற வடிவமைப்பைக் கொண்டதாக இருக்கும்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் RE Hunter 350 ஐ அறிமுகப்படுத்தலாம். இதன் சோதனை மாதிரி இந்தியாவில் பலமுறை பார்க்க கிடைத்துள்ளது. புதிய கிளாசிக்கில் உள்ள அதே 350சிசி எஞ்சினைக் கொண்டதாக இந்த பைக் இருக்கும்.