OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
ஜூலை மாதம் பிறந்திருக்கும் இந்த தருணத்தில், புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் சில ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவற்றை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? இங்கு பார்ப்போம்!
Zwigato:
பாலிவுட் நடிகர் கபில் ஷர்மா நடித்திருக்கும் படம், ஸ்விகாட்டோ (Zwigato). இந்த படத்தை நந்திதா தாஸ் இயக்கியிருக்கிறார். இந்த படம் ஜூலை மாதத்திற்குள் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mirzapur 3:
இந்திய அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் தொடர், மிர்ஜாப்பூர். இந்த தொடரின் 3வது சீசன் அமேசான் ப்ரைம் தளத்தில் இம்மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.
மலையாளி ஃப்ரம் இந்தியா:
நிவின் பாலி நடித்திருக்கும் படம், மலையாளி ஃப்ரம் இந்தியா. தியேட்டரில் எப்போதோ வெளியாகியிருந்தாலும் இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தாமதமாகவே வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பார்க்கலாம்.
ஆடுஜீவிதம்:
ஆடுஜீவிதம் படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. இதில் பிருத்வி ராஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இறுப்பினும் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
கருடன்:
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் படம் கருடன். இந்த படம் மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இப்போது இந்த படத்தை ஜூலை 3ஆம் தேதி முதல் (நாளை) அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
Ganpath:
கடந்த ஆண்டு வெளியான படம், கன்பத். இதில் டைகர் ஷ்ராஃப், கிருத்தி சனோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் இந்த ஜூலை மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ஏஜெண்ட்:
அகில் அக்கினேனி நடித்திருக்கும் படம், ஏஜெண்ட். தெலுங்கு படமான இது, இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.