UPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? இந்த கணக்கீட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம்

Tue, 28 Jan 2025-5:46 pm,
Central Governmemt Employees

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தியாக, சமீபத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறையை அமலுக்கு கொண்டுவந்தது. சமீபத்தில் அதன் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 2025 முதல் யுபிஎஸ் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதார்ரர்கள்

அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு சிறந்ததா, அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை சிறந்ததா? எதில் அவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? இந்த கேள்வு பல மக்திய அரசு ஊழியர்கள் மனதில் தற்போது உள்ளது.

UPS vs NPS

ஒரு உதாரணத்தின் மூலம் என்பிஎஸ் மற்றும் யுபிஎஸ் மூலம் கிடைக்கும் ஓய்வூதிய கணக்கீடுகளை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் காலகட்டத்தில், NPS மற்றும் UPS-க்கு வழங்கப்படும் பங்களிப்புகளையும், அரசாங்கத்தால் வழங்கப்படும் பங்களிப்பையும், இரண்டு திட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட ஓய்வூதியம் மற்றும் கையில் வரும் தொகையையும் கணக்கிடலாம்.

அந்த நபரது சராசரி சம்பளம் ரூ. 80,000 என்றும், அவர் 25 ஆண்டுகள் பணியாற்றினார் என்றும் வைத்துக் கொள்வோம். முழு கணக்கீடும் இதன் அடிப்படையில் செய்யப்படும். இதன் படி, மேலே குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாம் கணக்கிட்டால், NPS -இல், ஊழியர் சம்பளத்தில் இருந்து  10% மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பாக 14% செல்கிறது. இப்படி, ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் 24 சதவீதம் NPS-ல் டெபாசிட் செய்யப்படுகிறது.

 

25 ஆண்டுகளில் ஊழியரின் சராசரி ஊதியம் ரூ.80 ஆயிரம் என்றால், மாதா மாதம் NPS -இல் அவரது பங்களிப்பு ரூ.19,200 ஆக இருக்கும். அரசாங்கம் NPS -க்கு 9 சதவீத வட்டி வழங்குகிறது என வைத்துக் கொள்வோம். இந்த வகையில், 25 ஆண்டுகளில் அவரது மொத்த முதலீடு ரூ.57.60 லட்சமாக இருக்கும். அதில் வட்டி வருமானத்தைச் சேர்த்த பிறகு, மொத்த தொகை ரூ.2,16,86,983 ஆக அதிகரிக்கும்.

 

இப்போது UPS கணக்கீட்டை பார்க்கலாம். இதிலும் ஊழியரின் பங்களிப்பு 10 சதவீதமாகவே இருக்கும். எனினும், இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு 18.5 சதவீதமாக உள்ளது. ஆகையால், மாதா மாதம் சம்பளத்தில் 28.5 சதவீதம், அதாவது ரூ.22,800 ஊழியரின் UPS கணக்கில் செல்லும். 25 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.68.40 லட்சமாக இருக்கும். இதில் NPS அளவு வட்டி, அதாவது 9% வட்டி விகிதத்தில், மொத்த நிதி ரூ.2,57,53,292 ஆக அதிகரிக்கும்.

 

NPS -இல், ஓய்வு பெறும்போது, ​​ஊழியர்களுக்கு 60 சதவீதம் அதாவது ரூ.1,30,12,190 திருப்பித் தரப்படும். மீதமுள்ள தொகை வருடாந்திர தொகையாக (Annuity) இருக்கும். அதில், ஆண்டுக்கு 6 சதவீத வட்டி என்ற கணக்கில் உங்களுக்கு மாதா மாதம் ரூ.43,374 ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் பணத்தில் 40 சதவீதம் சேமிக்கப்படும், அது உங்களுக்கு பின்னர் கிடைக்கும்.

 

UPS -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் அனைத்தும் அரசாங்கத்திடம் இருக்கும். அதற்கு ஈடாக, ஒவ்வொரு 6 மாத சேவை முடிந்ததும் பணியாளருக்கு அவரது சம்பளத்தில் 10 சதவீதம் சேர்த்து வழங்கப்படும். இந்த வழியில், 25 ஆண்டுகளில் 50 அரையாண்டுகள் உள்ளன. சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ. 80,000 என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு அரையாண்டிலும் ரூ.48,000 கிடைக்கும். இந்த வழியில், 50 அரையாண்டு காலங்களுக்குப் பிறகு மொத்தம் ரூ.24லட்சம் மொத்தமாக வழங்கப்படும். ஓய்வூதியம் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், ஓய்வூதியம் மாதம் ரூ.50 ஆயிரமாக இருக்கும். 

மேற்கண்ட கணக்கீட்டிகளின் படி பார்த்தால், ஊழியருக்கு NPS-ல் ரூ.43,000 -க்கும் அதிகமான ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும் மொத்த தொகையாக சுமார் ரூ.2.17 கோடி நிதியும் கிடைக்கிறது. யுபிஎஸ் -இல், மொத்த தொகையாக ரூ.24 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. மீதமுள்ள ரூ.2.33 கோடியை அரசாங்கம் தன்னிடமே வைத்திருக்கும், அதற்கு ஈடாக NPS-ஐ விட வெறும் ரூ.7,000 கூடுதலான ஓய்வூதியம் கிடைக்கும். 

NPS-ல், மொத்தத் தொகையான ரூ.1.30 கோடியை FD-யில் முதலீடு செய்தால், அதற்கு 6 சதவீத வட்டி கிடைக்கிறது. அந்த வழியில் ஒவ்வொரு மாதமும் ரூ.65 ஆயிரம் கிடைக்கும். இதனுடன் ஆண்டுத் தொகையாகப் பெறப்பட்ட ரூ.43,000 தொகையைச் சேர்த்தால், நமது மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1.08 லட்சமாக மாறும்.  இது யுபிஎஸ் -இல் கிடைக்கும் ரூ.50,000 -ஐ விட மிக அதிகம்.

 

நாம் UPS-ல் ரூ.24 லட்சம் தொகையை FD -இல் போட்டால், 6 சதவீத வட்டி விகிதத்தில், நமக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 கிடைக்கும். இதை ஓய்வூதியத்துடன் சேர்த்தால், மொத்தம் ரூ.62 ஆயிரம் கிடைக்கும். அதேசமயம் NPS-ல் இதை விட ரூ.46 ஆயிரம் அதிகமாக கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link