Uric Acid பிரச்சனை இருக்கா? இதை மட்டும் கண்டிப்பா சாப்பிடாதீங்க, சிறுநீரகம் செயலிழக்கும்
அசைவம் அதிகம் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்கும் என்று அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அசைவம் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் யூரிக் அமிலம் கணிசமாக அதிகரிக்கும். இது தவிர கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவு ஆண்களில் 4 முதல் 6.5 mg/dl மற்றும் பெண்களில் 3.5 முதல் 6 mg/dl வரை சாதாரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு மேல் இருந்தால் உடலில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.
சரியான சிகிச்சையின் மூலம் யூரிக் அமில அளவை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். ஒரு நபர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. கடுமையான சந்தர்ப்பங்களில், அதிகரித்த யூரிக் அமிலம் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது. முறையான சிகிச்சை மற்றும் நல்ல உணவு முறை மூலம் யூரிக் அமில பிரச்சனையை முற்றிலுமாக அகற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால், இந்தப் பிரச்சனை ஒருபோதும் ஆபத்தான நிலையை எட்டாது.
யூரிக் அமிலம் அதிகமாக அதிகரிக்கும் போது, அது உங்கள் உடலின் மூட்டுகளில் படிந்துவிடும். உங்கள் கைகள் மற்றும் கால்களின் சிறிய மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இதனால் பலருக்கு நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த நிலை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகமானால், தாங்க முடியாத வலி ஏற்படும் போது பல நோயாளிகளுக்கும் சிறுநீரக கல் உருவாகிறது. அதிகரித்த யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் பொதுவாக தெரிவதில்லை. ஆகையால், இரத்த பரிசோதனைகள் அவ்வப்போது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவை அறிந்து கொள்ளலாம்.
யூரிக் அமிலத்தை இயற்கையான முறைகளிலும் கட்டுப்படுத்தலாம். இதைச் செய்ய, நீங்கள் சிவப்பு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை முற்றிலுமாக விலக்கி வைகக் வேண்டும். அதிக புரத உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். நீரேற்றமாக இருக்க அதிக தண்ணீர் குடிக்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் உடல் செயல்பாடுகளைச் செய்வதும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இயற்கையான கை வைத்தியங்கள் மூலம் யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்வது நல்லது.