Uric Acid அதிகரிப்பதால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தின் முதல் படியாகும். உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போதெல்லாம், தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் து நமது சிறுநீரகங்களுக்கு உடலின் நச்சுகளை வடிகட்ட உதவி கிடைக்கும். பல சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
ஓமம் உணவின் சுவையை அதிகரிக்க நாம் பயன்படுத்தும் ஒரு மசாலா ஆகும். எனினும், இதில் பல வித மருத்துவ குணங்களும் உள்ளன. இதன் மூலம் யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்தலாம். இது மற்ற வயிற்று பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது தவிர, உங்கள் யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், ஆலிவ் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே அதை குறைக்கலாம்.
நல்ல ஆரோக்கியத்திற்கு, ஒருவர் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியமாகும். தூக்கமின்மை பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைகிறது. ஆனால் குறைவான தூக்கத்தால் யூரிக் அமிலமும் அதிகரிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. எனவே போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)