திடீர் ட்ரெண்டிங்கில் ஊர்வசி ராவ்டேலா - ஏன் தெரியுமா?
இந்தி, தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை ஊர்வசி ராவ்டேலா, கிரிக்கெட் வீரர் ரிஷ்ப் பண்ட் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், இதனை இருவர் தரப்பிலும் யாரும் உறுதிப்படுத்தவில்லை.
நேற்று ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில், ரிஷப் பண்டிற்கு ஊர்வசி ஆறுதல் கூறியுள்ளாரா என்பதை தெரிந்துகொள்ள பலரும் அவரின் பெயரை கூகுளில் தேடி ட்ரெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இவரை இன்ஸ்டாகிராமில் 6 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இது ரிஷப் பண்ட் பலோயர்ஸை விட மிக அதிகம். அவரை 70 லட்சம் பேர்தான் இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.