TV பார்த்துக்கொண்டே பீட்ஸா சாப்பிட்டால் 3 லட்சம் வரை சம்பளம்..!

Mon, 18 Jan 2021-3:29 pm,

இதெல்லலாம் கேட்க உங்களுக்கு ஒரு கனவு மாதிரி தோனலாம். ஆனால், உண்மையிலேயே ஒரு நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் பாத்துகிட்டு, பீட்ஸா சாப்பிட்டு தூங்க பணம் கொடுக்க தயாராக இருக்கு. அமெரிக்காவைச் சேர்ந்த போனஸ் ஃபைண்டர் (Bonus Finder) அப்படிங்கிற நிறுவனம் தான் Binge Watcher அப்படினு சொல்லக்கூடிய இந்த வேலைக்கு ஆள் தேடிகிட்டு இருக்காங்க.

2021 ஆம் ஆண்டு தொடங்கியும், ஊரடங்கு இன்னும் முழுமையா முடியாததுனால, விளம்பர நோக்கத்திற்காக நெட்ஃபிலிக்ஸ் பார்க்கவும் மற்றும் பீட்ஸா சாப்பிடவும் சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாக போனஸ்ஃபைண்டர் நிறுவனம் தெரிவிச்சிருக்கு. தேசிய பீட்ஸா தினம் பிப்ரவரி 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, இந்த வேலைக்கு மக்கள் தேர்வு செய்யப்படுவாங்க. நெட்ஃபிலிக்ஸ் பார்த்துக்கிட்டே பீட்ஸா சாப்பிட  500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 36,600 ரூபாய் வழங்கப்படும்.

உண்மையிலேயே இந்த வேலைக்கு எந்த கண்டிஷனும் கிடையாது. நெட்ஃபிலிக்ஸ்ல பார்க்குற சீரிஸ் மற்றும் படங்களுக்கு ரிவியூ மற்றும் ரேட்டிங் கொடுக்கணும். அதுவும் இந்த வேலையோட ஒரு பகுதி தான். நடிப்பு, சீரிஸ் முடிவுகள் மற்றும் கதைக்களம் போன்றவற்றின் அடிப்படையில இதற்கான  ரிவியூ மற்றும் ரேட்டிங் கொடுக்கணும்.

அதேபோல், சாப்பிடும் பீட்ஸாவுக்கும் ரேட்டிங் கொடுக்கணும். பீட்ஸாவின் தரம், டாப்பிங்ஸ், சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பீட்ஸாவை மதிப்பீடு செய்யனும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link