தலைமுடியை சூப்பராக வச்சுக்க... நெல்லிக்காயை இந்த 5 வழிகளில் பயன்படுத்துங்க!

Tue, 03 Sep 2024-1:47 pm,

தலைமுடி அதிகம் கொட்டுவதும், தலையில் பொடுகு, ஈர் போன்ற தொல்லைகளும் இருப்போர் இந்த பிரச்னைகளை போக்க பல தீர்வுகளை தேடுவார்கள். அதுவும் 25 வயதை தாண்டிய இளைஞர்கள் தங்களின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிக முயற்சி எடுக்கிறார்கள். 

 

அந்த வகையில், அவர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருப்பது நெல்லிக்காய் ஒன்றுதான். நெல்லிக்காயை பல்வேறு விதங்களில் நீங்கள் பயன்படுத்தி உங்களின் தலைமுடி சார்ந்த சிக்கல்களை தீர்க்கலாம். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் வெவ்வேறு முறையில் பயன்படுத்துவது குறித்து இங்கு விரிவாக காணலாம். 

 

நெல்லிக்காய் தலைமுடியில் ஏற்படும் சிக்குகளில் சுத்தப்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தலையில் அழுக்கு சேராது. எனவே, நெல்லிக்காய் தூள், சீயக்காய் பொடி மற்றும் ரீத்தா தூள் ஆகியவற்றை சம அளவு தண்ணீரில் சேர்த்து, அது ஒரு நல்ல நிலைத்தன்மையை அடையும் வரை நன்கு கலக்கவும். இதனை உங்கள் ஈரமான தலைமுடியில் தடவி, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். நெல்லிக்காய் தூள் நாட்டு மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கிடைக்கும்.

 

தலையில் ஏற்படும் அலர்ஜி காரணமாக முடி உதிர்தல் அதிகமாகும். எனவே, இதனை தடுக்க நெல்லிக்காய் பொடியுடன் தேனை கலக்கவும். இதனை உங்கள் உச்சந்தலையில் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் அரை மணி நேரம் நன்கு ஊறவைத்த பின்னர் தலைமுடியை அலசவும். 

நெல்லிக்காயில் உள்ள வைட்டமிண் சி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். அதே நேரத்தில் பாதாம் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தலைமுடியை வலுவாக்கும். எனவே, நெல்லிக்காயை சாறை பிழிந்து, அதில் பாதாம் எண்ணெயை கலந்து தனி எண்ணெயை தயார் செய்யவும். அதை மிதமாக சூடுபடுத்தவும். அதனை தலையில் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். 2-3 மணிநேரத்திற்கு பொறுமையாக இருந்து அதன்பின் தலைக்கு குளித்தீர்கள் என்றால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும். 

 

எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் உச்சந்தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே, நெல்லிக்காயை சாறுடன் எலுமிச்சை சாறையும் கலக்கவும். இதனை தலையில் தேய்த்து சில மணிநேரங்களுக்கு காயவிடவும். அதன்பின் குளிக்கவும். இதுவும் தலைமுடி ஆரோக்கியத்தை வளர்க்கும். 

 

கறுவேப்பிலையில் வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், நெல்லிக்காய் பொடி மற்றும் வெந்தய பொடி ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் கறுவேப்பிலையை பொடியாக இடித்து இந்த கிண்ணத்தில் போட்டு, சிறு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும். 

 

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link