Utilize the Benefit! பிரபலமான 5 அரசு திட்டங்களைப் பயன்படுத்தி பயனடையுங்கள்
ஜன் ஒளஷதி திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருமானம் பெறுகிறார்கள். இத்திட்டத்தின் மூலம், மக்களுக்குத் தேவையான பொதுவான மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகளைத் திறப்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்குகிறது. கடையைத் திறக்க அரசு நிதி உதவியும் வழங்குகிறது. மருத்துவக் கடை உரிமையாளர் மருந்து விற்பதில் கமிஷன் பெறுகிறார். (Photo Courtesy - official website)
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் காப்பீடு (term insurance) நாள் ஒன்றுக்கு 1 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கிறது. காப்பீடு செய்தவரின் மரணத்தின் போது, இந்தத் தொகை அவரது குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. (Photo Courtesy - official website)
அடல் பென்ஷன் யோஜனா என்பது குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இந்த பிரபலமான ஓய்வூதிய திட்டத்தில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், 60 ஆண்டுகளுக்குப் பிறகு வயது வரம்பின் அடிப்படையில் 5000 வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. (reuters)
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat) மூலம், மக்களுக்கு மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன. நாட்டின் ஏழை குடும்பங்களுக்கு இலவச மற்றும் சிறந்த சிகிச்சை வசதிகளை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தியுள்ளது. (Photo Courtesy - official website)
சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்கு அரசாங்கத்தின் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் எளிதான நிபந்தனைகளுடன் ரூ .10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த வசதி கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வங்கிகளிலும் உள்ளது. (PTI)