மரண ஓலத்திற்கு முதல் நொடி வரை பக்திப் பரவசம்! ரத்தக்களறியான ஹத்ராஸ் மத கூட்ட நெரிசல்!

Wed, 03 Jul 2024-10:49 am,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்ததாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சமும் எழுகிறது  

ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாகவும் அறிவித்துள்ளார்.

குடும்பத்தினரை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநில அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்

இறந்தவர்கள் அல்லது மயக்கமடைந்தவர்கள் லாரிகள் மற்றும் டெம்போக்களில் சிக்கந்தர் ராவ் மருத்துவமனைக்க்கு கொண்டு செல்லப்பட்டனர். சுகாதார நிலையத்திற்கு வெளியே சடலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன

கூட்ட நெரிசல் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டதாகவும், ஆனால் இந்த நிகழ்வில் எத்தனை பேர் கூடியிருந்தனர் என்பது குறித்தும், கூட்டத்திற்கான அனுமதி வாங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்தும் தெரியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

போலே பாபா எனப்படும் நாராயண் சாகர் ஹரி சூரஜ் பால் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலி பகுதியில் உள்ள பகதூர் நகரில் வசிப்பவர். 17 ஆண்டுகளுக்கு முன்பு மாநில போலீஸ் பணியில் இருந்து விலகி சாமியாராக ஆனார்.  

போலே பாபாவின் சத்சங்கம் ஏற்பாடு செய்யப்படும் போது, கூட்டத்தின் பாதுகாப்பு, போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை அவரது தனிப்பட்ட சேவகர்கள் உறுதி செய்கின்றனர். பெண்களும் சேவகர்களின் படையில் இணைகிறார்கள்

போலே பாபா என்கிற நாராயண் சாகர் ஹரியின் வாழ்க்கை முறை மிகப் பெரிய பணக்காரர்களுக்கு நிகரானது. ஆடம்பர வாழ்க்கை வாழும் போலே பாலா, தனக்கென பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துள்ளார். அவரைப் பார்த்தால் சாமியாரைப் போல இருக்காது, கார்ப்பரேட் நிறுவன முதலாளியைப் போல டிப் டாப்பாக இருப்பார்  

 'சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு முழு பிரபஞ்சத்திலும் என்றென்றும் வெற்றி' என்பது போலே பாபாவின் முக்கியமான வார்த்தையாடல். வெள்ளை உடை அணிந்திருக்கும் நாராயண் சாகர் ஹரிக்கு விலை உயர்ந்த கண்ணாடிகள் பிடிக்கும். அவர் கையில் எப்போதும் தங்கக் கடிகாரம் இருக்கும். பாபாவின் ஆடைகள் மற்றும் காலணிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link