Glacier Burst: இயற்கை பேரிடர் மீட்புப் பணிகள் நடைபெறும் உத்தராகண்ட் பகுதி

Mon, 08 Feb 2021-10:21 pm,

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், ஜோஷிமடம் அமைந்துள்ள பகுதியில் பனிப்பாறை உடைந்ததை அடுத்து, தெளலி கங்கா ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. தப்போவன் சுரங்கப்பாதை அருகே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

(Photograph:PTI)

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை உறுப்பினர்கள் (ஐ.டி.பி.பி) சுரங்கப்பாதையில் இருந்து மக்களை வெற்றிகரமாக மீட்டனர், இப்போது அவர்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டாவது சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

(Photograph:AFP)

பனிப்பாறை உடைந்த தகவல் தெரியவந்த உடனே, மீட்புக் குழுக்களைச் அழைத்துச் செல்வதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டன. Mi-17   மற்றும் ALH ஹெலிகாப்டர்கள் டெஹ்ராடூனில் இருந்து ஜோஷிமடத்துக்கு பயணங்களை மேற்கொண்டன. இது பேரழிவு நிவாரண குழுக்கள் விரைவில் மீட்புப் பணியில் ஈடுபட உதவியாக இருந்தது. வான்வழி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

(Photograph:PTI)

தெளலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், கங்கையின் சிக்கலான கிளை நதிகளிலும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. உயரமான மலைப் பகுதிகளில் பீதியையும் பெரிய அளவிலான பேரழிவையும் ஏற்படுத்திய இயற்கை பேரிடராக மாறியது இந்த பனிப்பாறை வெடிப்பு.

(Photograph:PTI)

இமயமலை வடக்கில் ஒரு பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரால், அந்தப் பகுதியில் உள்ள பாலங்கள், சாலைகள் மற்றும் இரண்டு நீர்மின் நிலையங்கள் சேதமடைந்தன. அரசுக்கு என்டிபிசி நீர் மின் திட்டம் மற்றும் ரிஷிகங்கா மின் திட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே கூறப்படுகிறது.

 

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link