மாமன்னன் படத்தில் இணைந்த வைகைப்புயல்

Mon, 14 Mar 2022-9:25 pm,

உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

 

இப்படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. உடனே சூட்டிங் தொடங்கப்பட்டு சேலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.குமான் இசையமைக்கிறார். நெஞ்சுக்கு நீதி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பின்புலமாக வைத்து, அதற்கு திரைஓவியம் கொடுப்பதில் வல்லவரான மாரி செல்வராஜ், இந்தப் படத்திலும் அதேபோன்றதொரு கதைக்களத்தை கையில் எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட போஸ்டரே, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link