Valentine`s Day 2024: லவ்வர்ஸ் டே-வை விடுங்க..சிங்கிள்ஸ் டே என்றைக்கு தெரியுமா?
காதலர் தினம், வருடா வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்த இந்த தினம், பரவலாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பலர், சிங்கிளாக இருப்பர். அவர்களுக்கு காதலர் தினத்தில் இருந்து எப்படியாவது தப்பித்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று கூட தோன்றும். கவலை வேண்டாம், சிங்கிள்ஸ்களுக்கு என்று ஒரு தினம் உள்ளது. அது என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?
சிங்கிள்ஸ் தினம், நவம்பர் 11ஆம் தேதி வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிங்கிளாக இருப்பவர்கள் தங்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டு, தங்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கிளாக இருப்பவர்கள், முதலில் தங்களை தாங்களே நன்றாக காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு வரப்போகிறவர் எவ்வாறுஇருக்க வேண்டும், ஒரு உறவில் என்னென்ன உங்களுக்கான தேவை இருக்கிறது என்பதை பட்டியலிட வேண்டும்.
காதல் தோல்வியில் இருப்பவர்கள், காதலினால் மனம் உடைந்து இருப்பவர்கள் என சிலர் இந்த காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பர். அவர்கள், தங்கள் உடைந்து போன இதயத்தை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதிலிருந்து மீள என்னென்ன வழி உள்ளன என்பதை யோசிக்க வேண்டும்.
பக்க பலமாக இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த காதலர் தினத்தை செலவிடலாம். இதனால், நீங்கள் தனியாக இருக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படாது. உங்கள் நண்பர்களும் சிங்கிளாக இருக்கிறார்கள் என்றால், எல்லோரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் சிங்கிளாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகளை கூறிக்கொள்ளலாம்.
உங்களுக்கு உங்களை பிடிக்க வைக்க, உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். புதிய பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பலன் பெறலாம்.
பிப்ரவரி 14ஆம் தேதி சிங்கிளாக இருப்பவர்கள், நவம்பரில் சிங்கிள்ஸ் டே வரும் போது அவர்களின் காதலை கண்டுபிடித்து கட்டியணைத்து கொள்ளலாம். எனவே, காதல் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொண்டாலே உங்களுக்கானது உங்களை தேடி வரும்.