Bigg Boss 7: பிரதீப் விசயத்துல ஏன் இப்படி பண்னாங்கனு தெரியல - வனிதா!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. காரணம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டது தான்.
பிரதீப் வெளியில் அனுப்பப்பட்டதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பல நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவை கூறி இருந்தனர்.
இருப்பினும், சிலர் கமல்ஹாசனையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீப் வெளியேறியது குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். யாருக்குமே பயப்படாமல் நின்ற அனைவருக்கும் நான் கைதட்டுகிறேன். இதற்காக முயற்சி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
பிரதீப் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வனிதா கூறியுள்ளார்.
பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இன்று இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நின்று பார்த்துக்கோ, பார்த்துக்கோ என்று எப்படி சொல்லாமல் இருப்பான்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.