வசந்த பஞ்சமி 2025: இந்த நல்ல நாளில் தங்கம் வாங்குவது சிறப்பா...? வழிபாட்டு முறை விவரம்
![வசந்த பஞ்சமி 2025](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471839-1.png?im=FitAndFill=(500,286))
வசந்த பஞ்சமி என்பது வசந்த காலம் என்றழைக்கப்படும் இலையுதிர் காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அறிவாற்றலை வழங்கும் சரஸ்வதி தேவியை நோக்கி பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.
![வசந்த பஞ்சமி 2025](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471838-2.png?im=FitAndFill=(500,286))
வசந்த பஞ்சமி தினத்தன்று நீங்கள் சரஸ்வதி தேவியை நோக்கி பூஜித்தால் உங்களுக்கு கல்வி மட்டுமின்றி படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும். மேலும், தொழில் சார்ந்த வாழ்வும் சிறக்கும். வசந்த பஞ்சமி அன்று பலரும் தங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடக்கிவைப்பார்கள்.
![வசந்த பஞ்சமி 2025](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2025/01/28/471837-3.png?im=FitAndFill=(500,286))
பஞ்சமி திதியின்போது தான் வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவிக்கு பூஜை மேற்கொள்வார்கள். வரும் பிப்.2ஆம் தேதி காலை 7:09 முதல் மதியம் 12:35 வரை முகூர்த்தம் இருப்பதால் அந்த நேரத்திலேயே பலரும் பூஜிப்பார்கள்.
பஞ்சமி திதி பிப். 3ஆம் தேதி அன்று காலை 6:52 மணிக்கு நிறைவடையும். எனவே, நீங்கள் பிப். 2ஆம் தேதி முழுவதும் கூட பூஜை செய்யலாம். வீட்டில் இருந்தோ, கோயிலுக்குச் சென்றோ நீங்கள் வழிபாடு செய்யலாம். மேலும், சரஸ்வதி தேவியை போற்றி பஜனை பாடுவது கூடுதல் நன்மையாகும்.
நீங்கள் வீட்டில் பூஜிக்கிறீர்கள் என்றால், சரஸ்வதி சிலை அல்லது புகைப்படத்தை எடுத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட வேண்டும். மேலும், அதன் பாதத்தில் சாமந்தி பூ மற்றும் தாமரை பூவை வைக்கலாம். மேலும், புத்தகம், எழுதுகோல் போன்ற கல்வி சார்ந்த விஷயங்களை சரஸ்வதி தேவியின் காலடியில் வைத்து வணங்க வேண்டும்.
சரஸ்வதி பூஜை செய்யும் போது நீங்கள் மஞ்சள் அல்லது காவி நிற ஆடையை அணிந்துகொள்வது மேலும் சிறப்பானதாகும். மஞ்சள் மற்றும் காவி நிறங்கள் அறிவையும், செழிப்பையும் குறிக்கும் நிறங்களாகும்.
இதனால்தான், பலரும் வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் உலோகம் என்றழைக்கப்படும் தங்கத்தை வாங்கி அணிகின்றனர். அன்றைய நன்னாளில் தங்கம் வாங்குவதும் சுபமானதாகவே கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் கணிப்புகள், ஊடக தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.