வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சில இடங்களில் செருப்புகளை வைக்க கூடாது. இதனால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டின் படுக்கையறையில் செருப்புகளை ஒருபோதும் வைக்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வைத்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அதன் அருகில் செருப்புகளை கழட்டி வைக்க கூடாது. துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் வீட்டின் அடுப்படியில் செருப்புகை வைக்க கூடாது. உணவு புனிதமானது என்பதால் அந்த இடத்தில் செருப்பை வைத்தால் வீட்டில் நல்லது நடக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, வடகிழக்கு திசையில் செருப்புகளை வைக்க கூடாது. இது அசுபமாக பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டில் நிதி நெருக்கடி மற்றும் நிதி இழப்பு ஏற்படலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் முன்பக்க வாசலில் செருப்புகளை கழட்டி வைக்கக் கூடாது. இதன் காரணமாக வீட்டிற்கு வரும் லட்சுமி தேவி வராமல் போகலாம். இதனால் நிதி இழப்புகள் ஏற்படும்.