Vastu Tips: இந்த திசையை நோக்கி அமர்ந்து உணவு உண்டால் ‘ஆரோக்கியம்’ கெடும்!
சாப்பிடும் போது எப்போதும் சரியான திசையை பார்த்து உட்காரவும். வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு உண்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உடலுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதும் நல்லது. இது மன அழுத்தம் மற்றும் நோய்களை நீக்குகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனம் ஒருமைப்படும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணம், அறிவு பெற விரும்புபவர்கள் எப்போதும் வடக்கு நோக்கி அமர்ந்து உணவு உண்ண வேண்டும். மேலும், தொழில் தொடங்குபவர்கள் வடக்கு திசை பார்த்து நல்ல பலன் தரும் உணவுகளை உண்பதாக நம்பப்படுகிறது.
வியாபாரம் செய்பவர்கள் அல்லது வேலையில் விரைவான முன்னேற்றத்தை விரும்புபவர்கள் மேற்கு திசை பார்த்து உணவு உண்ண வேண்டும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி தெற்கு நோக்கி அமர்ந்து உணவு உண்ணக்கூடாது. இது யம திசை. இந்த திசையில் அமர்ந்து உணவு உண்பதால் நோய்கள் சூழும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, இரவு உணவிற்குப் பிறகு இரவு முழுவதும் சமைத்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகளை அப்படியே வைத்து விட்டு படுக்கைக்குச் செல்லக்கூடாது. இரவில் சமையலறையை அழுக்காக வைப்பது வறுமையை வரவழைக்கும் என்று கூறப்படுகிறது.
(பொறுப்பு குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது)