தீராத பணப் பிரச்சனையா; உங்களுக்கான தீர்வு இதோ..!!
வீட்டில் உடைந்த பொருட்கள், பழுதான பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். இவை வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பும்.
வீட்டில் குப்பைகள் சேர அனுமதிக்க வேண்டாம். வீட்டின் கூரையில் குப்பை சேர்ந்தால், தரித்திர ஏற்படும் என என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது உளவியல் ரீதியிலான சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
வீட்டில் வளம் கொழிக்க வேண்டும் என விரும்பினால், ரொக்க பணம் வைக்கும் இடம் சரியான திசையை நோக்கி வைத்திருப்பது அவசியம். அலமாரி அல்லது லாக்கரின் கதவு கிழக்கு திசை நோக்கி திறக்கும் படி இருந்தால் நல்லது
உங்கள் வீட்டில் எங்கேயும் நீர் கசிவு ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது குழாய் ஆனாலும் சரி, அல்லது தண்ணீர் தொட்டி என்றாலும் சரி, தண்ணீர் வீணாக்குவதால் கடன் அதிகரிக்கும்
வீட்டின் வடக்கு திசை குபேரரின் திசை என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே தண்ணீரை வடக்கு திசையில் வைத்திருப்பது செல்வத்தை பெருக்கும். நிதி பிரச்சனை தீரும்