Vitamin K: சைவம் சாப்பிடுபவர்களுக்கு சிறந்த உணவுகள்! வைட்டமின் கே ஊட்டச்சத்தின் புதையல்
வைட்டமின் K இன் குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம், தமனிகள் மற்றும் பிற மென்மையான திசுக்களின் கால்சிஃபிகேஷனை ஊக்குவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை ஏற்பட வைட்டமின் கே பற்றாக்குறை காரணமாகலாம். எனவே, வைட்டமின் கே உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஊட்டச்சத்துக்கள் அடங்கிய மருத்துவப் புதையல் என்று காலே கீரையைச் சொல்லலாம். வைட்டமின் K இன் சைவ ஆதாரங்களில் காலே முக்கியமானது. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள இந்தக் கீரையை ஸ்மூத்தி அல்லது சாலடாக சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் கே மூலங்களில் முக்கியமான ஒன்று அவகேடா பழம். இலை கீரைகளில் இருக்கும் அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவு வைட்டமின் கே சத்தை இது வழங்குகிறது.
முளைகட்டிய பயறு வகைகள், பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருக்கின்றன. இவற்றீல் வைட்டமின் கே சத்தும் அதிக அளவில் உள்ளது
வைட்டமின் K இன் சிறந்த சைவ ஆதாரமாக உள்ள பசலைக்கீரையில் வைட்டமின் கே சத்து தாராளமாக உள்ளது. உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதும் எளிது. இதில் வைட்டமின் கே மட்டுமல்ல, இரும்புச்சத்து உள்ளிட்ட வேறு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்தது பசலைக்கீரை
வைட்டமின் கே அதிகம் கொண்ட ப்ரக்கோலி, கணிசமான அளவு வைட்டமின் கே மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வேகவைத்தாலும், வறுத்தாலும் அல்லது சமைத்தாலு,ம் ப்ரோக்கோலி உங்கள் சைவ வைட்டமின் கே மூலங்களுக்கு அற்புதமான தேர்வாக இருக்கும்