Vehicle Registration: வாகனங்களின் டிரான்ஸ்பர் எளிதானது, இனி புதிய முறையில் பதிவு இருக்கும்
தற்போதுள்ள விதிகளின் படி, வாகன உரிமையாளர்கள், ஓரிடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைத் தவிர வேறு மாநிலத்தில் அதிகபட்சம் 1 வருடம் மட்டுமே வைத்திருக்க முடியும். 12 மாதங்களின் முடிவில், மீண்டும் பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட வாகனங்களின் இட பரிமாற்றம் எளிதாகவும் எந்த பிரச்சனை இல்லாமலும் நடக்க BH தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஆர்டிஓ-வுக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படாது. இதன் காரணமாக இந்த முழு செயல்முறையும் ஆன்லைனிலேயே முடியும் படி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சகம் 'IN' தொடரை முன்மொழிந்தது. குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் முன்மொழியப்பட்டது.
அடிக்கடி இடமாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியக்குறுகள் உள்ளவர்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். BH தொடர் (இந்தியத் தொடர்) வாகனங்களுக்கு, வேறு மாநிலத்திற்கு செல்லும் போது மறு பதிவு தேவையில்லை. வாகன உரிமையாளர்களுக்கு BH தொடருக்கான ஆப்ஷன் இருக்கும். இதற்கு, வாகன ஓட்டிகள் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சாலை வரியை செலுத்த வேண்டி இருக்கும்
கடைசி அறிவிப்பில், IN என்பது BH ஆக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, தனியார் வாகனங்களை பதிவு செய்யும் போது 15 வருட சாலை வரி செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது, அவர்கள் மீண்டும் 10 அல்லது 12 வருடங்களுக்கான சாலை வரியைச் செலுத்த வேண்டும். அதே போல் மீண்டும் பதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வாகனம் முன்பு பதிவு செய்யப்பட்ட முதல் மாநிலத்தில் செலுத்தப்பட்ட தொகையை அவர்கள் கோர வேண்டும். இந்த தேவையற்ற பிரச்சனைகளை அகற்றுவது இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை வரியின் ஸ்லாப் வேறுபடுகிறது. ஆனால் இப்போது பிஎச் தொடரில் 10 லட்சம் வரையிலான தொகை கொண்ட வாகனங்களுக்கு 8 சதவீதம், 10 முதல் 20 லட்சம் தொகை கொண்ட வாகனங்களுக்கு 10 சதவீதம், 20 லட்சத்துக்கு மேல் தொகை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது . டீசல் வாகனங்களுக்கு 2% கூடுதல் வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கு 2% குறைவான வரி நிர்ணயிக்கப்படும். பதினான்கு வருடங்கள் முடிந்த பிறகு, மோட்டார் வாகனத்திற்கு ஆண்டுதோறும் வரி விதிக்கப்படும். இது முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக இருக்கும்.