சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை; பணவரவு
சுக்கிரன் கிரகம் ஒருவருக்கு செல்வ செழிப்பு, திருமண வாழ்க்கை, ஆடம்பர வசதிகள் போன்றவற்றை அள்ளித்தரும் கிரகமாகும். ஒருவர் வாழ்க்கையில் நிறைய அதிர்ஷ்டங்களை பெற்றால் அவருக்கு சுக்கிர திசை என்று கூறுவதை கேட்டிருப்போம்.
மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சியினால் வாழ்க்கையில் இனிமையும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். வேலையில் விரும்பிய பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.
சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உங்கள் திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
கன்னி ராசியினருக்கு, புதிய வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பர வசதிகளுக்காக பணம் செலவழிப்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயர்வதால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மகர ராசியினருக்கு நிதி ஆதாயம் மூலம் பொருளாதார நிலை மேம்படும். உறவுகளில் இனிமை இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கி, திட்டமிட்டபடி பணிகள் நிறைவேறும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.