இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் வருது, உச்ச ராஜாதி பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Mon, 12 Aug 2024-9:06 am,

மேஷம்: கன்னியில் சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாக இருக்கும். உத்தியோகத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி சிக்கல் ஏற்படும். அதிகப்படியான செலவுகள் ஏற்படும். தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன் கிடைக்கலாம். இந்தப் பெயர்ச்சியின் பலன் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். பொருள் வளம் பெருகும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கலாம். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.

 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்படலாம். நிதி நிலை சற்று மோசமடையலாம். வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறலாம். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். வியாபாரத்தில் லாபம் பெருகி முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பெருகும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாள் பணிகள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

தனுசு: கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகளை பெறலாம்.

 

மகரம்: சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சில சிக்கலை ஏற்படுத்தலாம். நிதி நிலையில் சற்று மோசமடையலாம். நிதி இழப்பீடும் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். உடல்நிலையும் மோசமடையலாம்.

 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் அள்ளித் தரும். திடீர் நிதி ஆதாயம் உண்டாக்கலாம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

 

சுக்கிரன் மூல மந்திரம் "ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ", என்கிற மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link