சுக்கிரன் பெயர்ச்சி: இன்னும் 10 நாட்களில் இந்த 4 ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது..!!
)
சுக்கிரன் டிசம்பர் 30 ஆம் தேதி வக்கரம் பெற்று தனுசு ராசியில் உழைகிறார். 2022 பிப்ரவரி 27 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கிறார். இது 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கிறது.
)
இந்த சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் அடைவார்கள். மேலும் நிறைய பண வரவும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள், புத்தாண்டில் தங்கள் இலக்குகளை அடைவார்கள். மாணவர்கள் பயனடைவார்கள்.
)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பெரும் பண பலன்களைத் தரும். பணப்பற்றாக்குறையால் இதுவரை தேங்கியிருந்த வேலைகள் இனி விரைந்து முடிவடையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மேலும் சுக்கிரனின் அருளால் அனைவரிடமும் நல்ல பெயரை பெறலாம்.
கடக ராசிக்காரர்களுக்குப் பிற்போக்கான சுக்கிரன் தனுசு ராசியில் பிரவேசிப்பது தொழிலில் பெரும் முன்னேற்றத்தைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணம் சாதகமாக இருக்கும். நிதி நிலை வலுவடையும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். வருமானம் பெருகும், பொருளாதார நிலை வலுப்பெறும். புதிய வேலையைத் தொடங்கலாம், வெற்றி கிடைக்கும்.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)