சினிமா டூ அரசியல்; பழம்பெரும் நடிகை ஜமுனாவின் பின்னணி
)
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
)
கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ் - கவுசல்யா தேவி ஆகியோருக்கு மகளாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தவர் ஜமுனா.
)
சிறுவயது முதலே பள்ளியில் மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டி நடித்து வந்த அவருக்கு, அவரது தாயார் உறுதுணையாக இருந்ததுடன், பாட்டு மற்றும் ஹார்மோனியம் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொள்ளவும் சிறப்பு பயிற்சி அளித்தார்.
தனது 16 வயதில் டாக்டர் கரிக்காபட்டி ராஜாராவ்வின் ‘Puttilu’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜமுனா. தமிழில் கடைசியாக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் அவரது தாயாராக நடித்திருந்தார். மொத்தம் 198 படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிப்பிற்காக பல விருதுகளை வென்ற இவர், பின்னர் 1980-களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1989-ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் எம்.பி. ஆக இருந்தவர், 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர், அரசியலில் இருந்து விலகினார்.