விஐ புதிய டேட்டா வவுச்சர் பிளான் `விளம்பரங்கள் தொல்லை இல்லாமல் இசை கேட்டு மகிழலாம்`

Thu, 29 Dec 2022-5:08 pm,

வோடபோன் ஐடியா (VI) இந்தியாவில் தனது பயனர்களுக்காக புதிய டேட்டா வவுச்சர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்த டேட்டா வவுச்சர்கள் ரூபாய் 25 முதல் தொடங்குகிறது. Vi செயலியில் விளம்பர தொந்தரவு இல்லாமல் ஹங்காமாவில் இசையைக் கேட்கலாம்.

 

4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.25. இது 1 நாளுக்கு 1.1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 7 நாட்களுக்கு Ad Free இசையை கேட்கலாம்.

வோடஃபோன் அறிமுகப்படுத்திய மற்றொரு புதிய 4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.55. இது 7 நாட்களுக்கு 3.3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் 1 மாதத்திற்கு விளம்பரமில்லா இசை சந்தாவைப் பெறலாம்.

இந்தத் திட்டங்களுக்குப் பிறகு, VI பயனர்களுக்கு மேலும் ஒரு விளம்பரமில்லா இசைத் திட்டம் உள்ளது. ரூ.108 விலையுள்ள திட்டத்தில் 6ஜிபி டேட்டா மற்றும் 15 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இது 3 மாதங்களுக்கு விளம்பரமில்லா இசையை கேட்டு மகிழலாம். 

இந்த விளம்பரமில்லா திட்டங்கள், அதிக டேட்டாவை விரும்பும் குறைந்த கால அளவிற்கான பயனர்களுக்கானது. இருப்பினும், இந்த திட்டங்கள் உங்களுக்கு 4G இணைப்பை மட்டுமே கிடைக்கும். 5G அல்ல.

இவை டாப்-அப் திட்டங்களாகும். அதாவது உங்களிடம் ஏதாவது ஒரு திட்டம் செயலில் இருக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே உங்கள் டேட்டாவை டாப்-அப் செய்ய முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link