Vi vs BSNL vs Jio: 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் எந்த பிளான் சிறந்தது
Vi இன் 699 ரூப்பாய் திட்டம்: Vi இன் ப்ரீபெய்ட் திட்டமான ரூ .699 திட்டத்தில், இரட்டை தரவு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, பயனர்கள் இந்த திட்டத்துடன் தினசரி 4 ஜிபி தரவைப் பெறுகிறார்கள். இது தவிர, பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் வசதியும் கிடைக்கிறது. அதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்களாகும். இந்த திட்டத்தில் வார இறுதியில் தரவு மாற்றம் (Weekend Roll over) செய்யப்படுகிறது.
Vi இன் 599 ரூபாய் திட்டம்: Vi இன் ரூ .599 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. இது தவிர, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் வார இறுதியில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. இதில், Vi movies and TV-க்கான அணுகலும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் 999 ரூபாய் திட்டம்: ஜியோவின் (Jio) ரூ .999 ஜியோ திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவு கிடைக்கிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 252 ஜிபி தரவு கிடைக்கிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ செயலிகளின் சந்தாவை இலவசமாகப் பெறலாம்.
பிஎஸ்என்எல்லின் 599 திட்டம்: பிஎஸ்என்எல்லின் (BSNL) இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ .599 ஆகும். இது 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நிறுவனம் தினசரி 5 ஜிபி தரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், 5 ஜிபி தரவு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 80 கி.பி.பி.எஸ் வரை குறைகிறது. 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், நீங்கள் மொத்தம் 420 ஜிபி தரவைப் பெறுவீர்கள்.