விடுதலை 2 ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எந்த தேதியில் வெளியாகும் தெரியுமா?
இதுவரை தோல்வியே பெறாத இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், விடுதலை பாகம் 2.
கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் வெளியாகி இருக்கிறது. இதில், முக்கிய கதாப்பாத்திரமாக வந்த விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டரின் கதையை காண்பித்திருக்கின்றனர்.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே, விடுதலை 2 படத்திற்கு பலர் நெகடிவ் விமர்சனங்களை கொடுத்தனர். காரணம், படத்தில் பேசப்பட்டிருந்த அரசியல் மீது பெரும்பாலானோருக்கு உடன்பாடில்லை.
விடுதலை படத்தில் இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமாக வந்தவர், மஞ்சு வாரியர். இவர் கதாப்பாத்திரத்திற்கும் பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. அதே போல, கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோருடைய நடிப்பும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
விடுதலை 2 படம், முதல் 2 நாட்கள் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் சறுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால், இப்படத்துடன் வெளியான முஃபாசா:தி லயன் கிங் படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது.
பொதுவாக, படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் சில நாட்களிலேயே ஓடிடி ரிலீஸ் குறித்த விவரங்களும் வெளியாகி விடுகிறது. அந்த வகையில், விடுதலை 2 படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றிருக்கிறது. வரும் ஜனவரி 24ஆம் தேதி அல்லது அதற்கு மேற்பட்ட தேதிகளில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சர்ப்ரைஸாக, 1 மணி நேர கூடுதல் காட்சியும் (Director's cut) இடம் பெறலாம் எனக்கூறப்படுகிறது.