புதிய BMW EV கார் வாங்கிய விஜய்! எவ்வளவு விலை தெரியுமா?

Wed, 24 Jan 2024-2:41 pm,

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார்.  மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  

 

தற்போது விஜய் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.  BMW பிராண்டில் இருந்து எலெட்ரானிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  இதன் விலை மற்றும் மற்ற விவரங்களை பற்றி பார்ப்போம்.

 

இந்த BMW எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது.  வெகு சிலரே இந்த காரை தற்போது வாங்கி உள்ளனர்.  அதில் விஜய்யும் ஒருவராக உள்ளார்.  

 

இந்த கார் ஒரு அதி நவீன சொகுசு கார் என்று கூறப்படுகிறது.  சகல வசதிகளுடன் ஒரு மினி ஹோம் தியேட்டர் செட்டப்பும் இந்த BMW காரில் உள்ளது.  இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 2.5 கோடி ரூபாய் ஆகும். 

 

தளபதி விஜய்யிடம் ஏற்கனவே Rolls Royce, Toyota Innova, Range Rover, Benz, Audi, BMW போன்ற கார்கள் உள்ளது.  விஜய் ஷூட்டிங்கிற்கு தினசரி Toyota Innova காரை பயன்படுத்துகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link