விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?
தளபதி விஜய்யின் 'லியோ' மற்றும் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' ஆகிய இரண்டு முக்கிய அப்டேட்கள் ஒரே தேதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுன் பிறந்தநாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவரது கதாபாத்திரத்தை விளக்கும் ஒரு வீடியோ வெளியிடப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' ஒரு இராணுவ வீரர் கதை மற்றும் தேசபக்தி கருப்பொருள்கள் கொண்ட கதை என்பதால் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்திய சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இதில் விஜய் மற்றும் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் தயாரித்துள்ள 'எஸ்கே 21' படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜிவிபி இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடியாக நடிக்கின்றனர்.