`லியோ` படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கெட்டப் இதுதானா?

Tue, 09 May 2023-1:57 pm,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் கலந்துகொள்கிறார்.  அங்கு அவருக்கு ஒரு லுக் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது, அதில் வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் ஹீரோ போல காட்சியளிக்கிறார்.

 

தளபதி விஜய்யுடன் முதன்முறையாக 'லியோ' படத்தில் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார்.  மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் நடித்திருக்கிறார்.

 

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதியன்று உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.

 

'லியோ' படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link