விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!
"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." என்ற வாசகத்துடன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த ஆண்டு கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
சமீபத்தில் மிகப்புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8ன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிக்பாஸ் கடந்த 7 வருடங்களாக ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.
முன்னதாக இந்த புதிய சீசனின் ப்ரோமோவை வெளியீட்டை, விஜய் டிவி மிகப்புதுமையான முறையில் நடத்தியது. தமிழகம் முழுக்க, மக்கள் குழுமியிருக்கும், முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில், பெரிய திரையில் மக்கள் முன்னிலையில் அவர்களையே வைத்து சர்ப்ரைஸாக வெளியிட்டது.
இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக்கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." எனும் டேக் லைனை சொல்லி முடிக்கும் டிரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட விழாவுடன் கோலாகலமாகத் துவங்கிறது. பவித்ரா ஜனனி, அன்ஷிதா, ரஞ்சித், பப்லு பிரிதிவ்ராஜ், பூனம் பஜ்வா, குரைஷி, அமலா ஷாஜி, சம்யுக்தா விஸ்வநாதன் போன்றவர்கள் வீட்டின் உள்ளே போக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.