விஜய் சேதுபதியின் இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
ஜவான் இந்த ஆண்டு வெளியான பான் இந்திய அதிரடி திரில்லர் திரைப்படமாகும், அட்லீ இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்திய அளவில் இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படம் மாஸ்டர். இந்த படத்தில் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ‘சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படம் வசூலில் சாதனை படைத்தது. பலரின் பாலிய காதலை நினைவுபடுத்தியது.
விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பீட்சா திரைப்படம், ஒரு வித்தியாசமான பேய் படமாக இருந்தது.