இந்த நடிகர்களாம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டியதா?

Thu, 21 Jul 2022-1:04 pm,

ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜய்யை நடிக்கவைக்க இயக்குனர் திட்டமிட்டதாகவும், படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் இந்த திட்டத்தில் இணைய முடியாமல் போனதாக முன்னர் பேட்டியொன்றில் இயக்குனர் கூறியிருந்தார்.

 

இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகியது, ஆனால் அவர் அந்த சமயம் 'அண்ணாத்தே' படத்தில் ஒப்பந்தமானதால் இத்திட்டத்தில் நடிக்காமல் போய்விட்டார்.

 

வரலாற்று திரைப்படமான பாகுபலி மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.  இவர் சில காரணங்களால் இந்த திட்டத்தில் சேரமுடியாமல் போன நிலையில், அந்த கதாபாத்திரத்தை த்ரிஷா ஏற்றுக்கொண்டார்.

 

மகேஷ் பாபு இந்த படத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த நிலையில், படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அவராலும் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனது.

 

பாகுபலி படத்தில் கட்டப்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சத்யராஜ், ஏற்கனவே சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link