விஜய்யின் மாநாடு நடைபெறுமா? புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக புஸ்ஸி ஆனந்திற்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சில கேள்விகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வருகின்ற 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக அனுமதி கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்பு காவல்துறையினர் இன்று புஸ்ஸி ஆனந்த் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீஸில் பல கேள்விகளை காவல்துறையின் கேட்டுள்ளனர்.
குறிப்பாக மாநாடு எத்தனை மணிக்கு துவங்கி எப்போது முடிவடையும்? மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வருவார்கள்? பாதுகாப்பிற்காக எத்தனை காவலர்கள் தேவைப்படுகிறார்கள்? வாகன நிறுத்துமிடம் போதுமானதாக இருக்கிறதா? அல்லது கூடுதலாக வேறு பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? என்று கேட்டுள்ளனர்.
மேலும் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட சில கேள்விகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
பார்க்கிங், பாதுகாப்பு, குடிநீர், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்ட கேள்விகளையும் முன்வைத்து அடுத்த 5 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.